'பிக்பாஸ்' டெலிவிஷன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரூ.1,000 கோடியா?
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 16-வது சீசனை தொகுத்து வழங்க சல்மான் கான் 1,000 கோடி சம்பளம் கேட்டிருந்தார்.;
இந்திய அளவில் பிரபலமான 'பிக்பாஸ்' நிகழ்ச்சி அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியில் மட்டுமே இந்த நிகழ்ச்சி 15 சீசன்களை கடந்துள்ளது. 15 சீசன்களையும் முன்னணி இந்தி நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கியிருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் கோபம், அன்பு, நகைச்சுவை என தனது பல பரிமாணங்களை காட்டி சல்மான் கான் கவர்ந்து வருகிறார்.
இதற்கிடையே 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் இருந்து வெளியேற பலமுறை சல்மான் கான் விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் 'பிக்பாஸ்' குழு அவரை விடுவதாக இல்லை.
இதற்கிடையே 'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் 16-வது சீசனை தொகுத்து வழங்க சல்மான் கான் வழக்கத்தை காட்டிலும் (கடந்த சீசனில் ரூ.350 கோடி) 3 மடங்கு அதிக சம்பளம் கேட்டிருந்தார்.
இதனால் 'பிக்பாஸ்' குழு அதிர்ச்சி அடைந்தாலும், அவரை விட்டுவிடவில்லை. கேட்டபடியே ரூ.1,000 கோடியை சம்பளமாக தரும் முடிவுக்கு வந்திருக்கிறார்கள். ஆனால் சல்மான்கான் தரப்பில் இன்னும் ஒத்துக்கொள்வதாக தகவல் வரவில்லையாம்.
தென் இந்திய திரைப்படங்கள் ரூ.1,000 கோடியை உலகளவில் வசூலாக எடுத்து வரும் நிலையில், ஒரு நடிகருக்கு டெலிவிஷன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இவ்வளவு சம்பளமா? என திரையுலகினர் சிலாகிக்கிறார்கள்.