இந்திய திரையுலகில் சமீப காலமாக கதாநாயகர்களுக்கு இணையாக கதாநாயகிகளும் போட்டி போட்டு சம்பாதிக்கிறார்கள். சினிமாவை தாண்டி விளம்பர படங்களில் நடித்தும் கோடி கோடியாய் நடிகைகள் சம்பாதிக்கிறார்கள்.
இந்த நிலையில் அதிக வருமான வரி செலுத்தும் நடிகைகள் பட்டியலில் தீபிகா படுகோனே முதல் இடத்தில் இருக்கிறார். இவர் ஏற்கனவே 2016-2017 வருவாய் ஆண்டில் ரூ.10 கோடி வரி செலுத்தி இருந்தார். கடந்த வருடமும் ரூ.10 கோடி வரி செலுத்தி அதிக வரி செலுத்திய நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆண்டுக்கு தீபிகா படுகோனே வருவாய் ரூ.40 கோடி. ஒரு படத்துக்கு ரூ.15 கோடி சம்பளம் வாங்குகிறார். விளம்பர தூதுவராக இருந்து ரூ.10 கோடி வசூல் செய்கிறார். 2019-ல் ரூ.49 கோடி சம்பாதித்து இருந்தார். பத்மாவதி படத்தில் நடிக்க ரூ.12 கோடி வாங்கினார். அதே வருடம் ரஜினிகாந்த், அஜய்தேவ்கான், ரோஹித் சர்மா ஆகியோரை பின்னுக்கு தள்ளி அதிக வருவாய் ஈட்டிய டாப் 10 பிரபலங்கள் பட்டியலிலும் இடம்பிடித்தார். அலியாபட் ஆண்டுக்கு ரூ.5 முதல் ரூ.6 கோடியும், கத்ரினா கைப் ரூ.5 கோடியும் வரி செலுத்தி உள்ளனர்.