'கங்குவா' படத்தின் அருமை அதன் இரண்டாம் பாகத்தில் தான் தெரியும் - நட்டி நட்ராஜ்

கங்குவா படத்தின் இரண்டாம் பாகம் குறித்து நடிகர் நட்டி நட்ராஜ் பேசியுள்ளார்.

Update: 2024-12-23 11:26 GMT

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் கிட்டத்தட்ட 11500 திரையரங்குகளில் கடந்த மாதம் 14-ந் தேதி வெளியானது. மேலும் இந்த படத்தில் நடிகர் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். இப்படம் இதுவரை ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதற்கிடையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து தகவல் வெளியானது.

இந்த நிலையில், கங்குவா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் நட்டி நட்ராஜ் கங்குவா படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். கங்குவாவின் முதல் பாகத்தை மட்டும் பார்த்துவிட்டு யாரும் விமர்சிப்பது அவ்வளவு நல்லதல்ல. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை பார்த்தால் அனைவருக்கும் பிடிக்கும். அப்போது தான் கங்குவாவின் அருமை எல்லோருக்கும் புரிய வரும் என்று கூறியிருக்கிறார். விரைவில் கங்குவா 2 குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்