வாடகை வீடு தர மறுப்பு... கவர்ச்சி நடிகை வருத்தம்

வாடகை வீடு தர மறுப்பதாக இந்தி கவர்ச்சி நடிகை உர்பி ஜாவேத் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.;

Update:2023-01-27 10:17 IST

இந்தி கவர்ச்சி நடிகை உர்பி ஜாவேத் தன்னை அரைகுறை உடையில் ஆபாசமாக புகைப்படங்கள் எடுத்து வலைத்தளத்தில் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். இவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர்.

உலக அளவில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலிலும் உர்பி ஜாவேத் இடம்பிடித்துள்ளார். இந்த நிலையில் ஆபாச உடைகள் அணிவதால் தனக்கு மும்பையில் வாடகைக்கு வீடு தர மறுப்பதாக வருத்தம் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து உர்பி ஜாவேத் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், " எனக்கு வீடு வாடகைக்கு தர தயங்குகிறார்கள். எனது உடையை காரணம் காட்டி வீடு வாடகைக்கு தர மறுக்கிறார்கள். சிலர் அரசியல் அச்சுறுத்தல்கள் காரணமாகவும் வீடு தருவது இல்லை. மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை வீட்டை கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக உள்ளது. வாடகைக்கு வீடு தேடுவது சவாலாகவும் உள்ளது'' என்று தெரிவித்து உள்ளார்.

உர்பி ஜாவேத்துக்கு ஆதரவாக சிலர் கருத்து தெரிவித்து உள்ளனர். இன்னும் சிலர் வாடகைக்கு வீடு வேண்டும் என்றால் உடம்பை மறைத்து ஒழுங்காக ஆடை அணியுங்கள்' என்று அறிவுரை சொல்லி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்