"மீண்டும் கவர்ச்சி நடனம் ஆட தயார்" - நடிகை பபிதா சொல்கிறார்
கமல்ஹாசனின் ‘நாயகன்' படத்தில் ‘நான் சிரித்தால் தீபாவளி...' என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியவர் பபிதா. இவர் சில வருடங்களுக்கு பின், மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:-
"என்னுடைய தந்தை ஜஸ்டின், எம்.ஜி.ஆர். படங்களில் நடித்து பின்னாளில் எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சரான பிறகும் அவரிடம் எந்த பிரதிபலனும் பாராமல், அவரது விசுவாசியாகவே கடைசி வரை அவருக்காக வாழ்ந்தவர் என்பது பலருக்கும் தெரியும். அவரது மகளான எனக்கும் அதே குணம் உண்டு.கமல்ஹாசன் படத்தில் நான் நடனமாடியதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். இப்போதும் அவர் நடிக்க அழைத்தாலோ அல்லது கவர்ச்சி நடனமாட அழைத்தாலோ நான் தயாராகவே இருக்கிறேன். 'நாயகன்' படத்தில் இடம்பெற்ற 'நான் சிரித்தால் தீபாவளி...' என்ற பாடலை இன்றைக்கும் ரசிகர்கள் மறக்க மாட்டார்கள். பபிதா சிரித்தால் தீபாவளி தான் என்று ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்".
இவ்வாறு அவர் கூறினார்.