நடிகர் சூர்யாவை சந்தித்த 'ஆர்.டி.எக்ஸ்' பட இயக்குநர்

கேரளாவில் சூர்யாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் ‘ஆர்.டி.எக்ஸ்’ இயக்குநர் நகாஸ்.;

Update:2024-09-10 15:35 IST

கேரளாவில் சூர்யாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் 'ஆர்.டி.எக்ஸ்' இயக்குநர் நகாஸ். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தினை 2டி நிறுவனம் தயாரித்து வருகிறது. அந்தமான், ஊட்டி, சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று இருக்கிறது.

சூர்யாவை வைத்து சில காட்சிகளை படமாக்க கேரளா சென்றது படக்குழு. அங்கு படப்பிடிப்புக்கு இடையே, சூர்யாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் 'ஆர்.டி.எக்ஸ்' இயக்குநர் நகாஸ். இந்தச் சந்திப்பின்போது 'ஆர்.டி.எக்ஸ்' தனக்கு மிகவும் பிடித்த படம் என்பதையும் சூர்யா தெரிவித்திருக்கிறார்.

இந்தக் கூட்டணியின் திடீர் சந்திப்பு குறித்து திரையுலகில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. இதில் இந்த கூட்டணி விரைவில் இணைய இருக்கிறது. அதற்கான முதற்கட்ட சந்திப்பு இது என்கிறார்கள். சூர்யாவுக்காக முழுக்க ஆக்சன் பின்னணியில் தயாரித்த கதையின் முன்னோட்டத்தை மட்டும் அவரிடம் தெரிவித்திருக்கிறார் 'ஆர்.டி.எக்ஸ்' இயக்குநர் நகாஸ். விரைவில் முழுமையான கதையையும் தெரிவிக்கவுள்ளார் என்கிறார்கள்.

சூர்யாவை சந்தித்தது குறித்து 'ஆர்.டி.எக்ஸ்' இயக்குநர் தனது சமூக வலைதள பதிவில் "எனது அபிமான நாயகன் சூர்யாவை சந்தித்தது ஒரு கனவு நினைவாதை போன்றது. அவரது பணி எனக்கு எப்போதும் உத்வேகம் அளித்தது. அவர் 'ஆர்டிஎக்ஸ்' படத்தை எவ்வளவு ரசித்தார் என்பது எனக்கு கிடைத்த மிகப் பெரிய பாராட்டு. சூர்யாவை சந்தித்த தருணம் ஒரு சிறப்பு இடத்தைப் பிடிக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்