துல்கர், ராஷ்மிகாவின் 'சீதா ராமம்'
காஷ்மீரைச் சேர்ந்த முஸ்லிம் பெண்ணாக அஃப்ரீன் என்ற கேரக்டரில் நடிக்கிறார் ராஷ்மிகா மந்தனா.
துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாகூர், சுமந்த் ஆகியோர் நடிக்க, ராகவபுடி இயக்கும் படம், 'சீதா ராமம்.' வைஜயந்தி மூவிஸ், ஸ்வப்னா சினிமா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் துல்கர் சல்மான் நடிக்கும் 2-வது படம், இது. இவர்களின் முதல் படம், 'நடிகையர் திலகம்' (மகா நடி).
சீதா மற்றும் ராமாக, மிருணாள் தாகூர் மற்றும் துல்கர் சல்மான் நடிக்க, அப்ரீன் என்ற துணிச்சல் மிகுந்த முஸ்லிம் பெண்ணாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.