புதிய காரில் ஊர் சுற்றும் ரன்பீர் கபூர்-ஆலியாபட் தம்பதி

கடந்த புதன் கிழமை ரன்பீர் கபூர் ரூ.8 கோடி மதிப்பிலான புதிய 'ஸ்வான்கி" காரை வாங்கினார்.

Update: 2024-04-07 05:40 GMT

மும்பை,

இந்தி திரைத்துறையின் முன்னணி நடிகை ஆலியாபட். இவர் கடந்த 2022ம் ஆண்டு இந்தி நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ராகா என பெயரிடப்பட்டது.

இந்நிலையில், ரன்பீர் கபூர் - ஆலியாபட் தம்பதி தங்களது மகள் ராகாவுக்காக ரூ. 250 கோடி மதிப்பில் பங்களா ஒன்றை மும்பையில் கட்டி வருகிறார்கள். இதன் மூலம் பாலிவுட்டின் பணக்கார குழந்தையாக ராகா இருப்பார்.

இந்நிலையில், கடந்த புதன் கிழமை ரன்பீர் கபூர் ரூ.8 கோடி மதிப்பிலான புதிய 'ஸ்வான்கி" கார் ஒன்றை வாங்கினார். அந்த புதிய காரை ரன்பீர் கபூர் வீட்டுக்கு ஓட்டி வரும் வீடியோ இணையத்தில் பரவியது.

இந்நிலையில், அந்த புதிய 'ஸ்வான்கி" காரில் நேற்று இரவு ரன்பீர் கபூர்-ஆலியாபட் தம்பதி ஜாலியாக ஊர் சுற்றியுள்ளனர். இது குறித்தான புகைப்படங்கள் இணையத்தில் பரவியுள்ளன. அந்த புகைப்படத்தில் ரன்பீர் கபூர் கருப்பு நிற உடையையும் ஆலியாபட் சிவப்பு நிற உடையையும் அணிந்திருக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்