அடுத்த மாதம் வருகிறதா 'புஷ்பா 2' டிரெய்லர்? - வெளியான தகவல்

'புஷ்பா 2 தி ரூல்' படம் டிசம்பர் 6-ந் தேதி வெளியாக உள்ளது.

Update: 2024-10-04 05:19 GMT

சென்னை,

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படம் புஷ்பா தி ரைஸ் . இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக . 'புஷ்பா 2 தி ரூல்' படம் உருவாகி வருகிறது.

சமீபத்தில் 'புஷ்பா 2 தி ரூல்' படத்தின் டீசரும் அதனைத் தொடர்ந்து படத்தின் பாடல்களில் லிரிக் வீடியோவும் வெளியாகி வைரலாகின. இப்படம் கடந்த 15-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படப்பிடிப்பில் சில தாமதங்கள் ஏற்பட்டதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.

பின்னர், 'புஷ்பா 2 தி ரூல்' படம் வருகிற டிசம்பர் 6-ந் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்தனர். தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாக உள்ளதாக தெரிகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்