ரசிகர்களை கவராத பிரியங்கா சோப்ராவின் இசை ஆல்பங்கள்

Update:2023-03-05 08:00 IST

தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்து பாப் பாடகர் நிக் ஜோனசை திருமணம் செய்து அமெரிக்காவில் குடியேறி இருக்கிறார். பிரியங்கா சோப்ராவுக்கு பாடகியாக ஆசை இருந்தது. இதற்காக அவரே பாடல் எழுதி பாடி இன் மை சிட்டி, எக்ஸாடிக் ஆகிய இரண்டு இசை ஆல்பங்களை வெளியிட்டார். ஆனால் அவற்றுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் வருத்தத்தில் இருக்கிறார். இதுகுறித்து பிரியங்கா சோப்ரா அளித்துள்ள பேட்டியில், "எனது இசை பயணம் அவ்வளவு நன்றாக போகவில்லை. இசையில் நான் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. அதற்கான பயிற்சிகள் எடுக்காமல் இது போன்ற பாடல் ஆல்பங்கள் தயாரிக்க கூடாது என முடிவு செய்து கொண்டேன். இசையில் கற்றுக்கொண்டது கையளவுதான். அதனால்தான் எனது ஆல்பம் ரசிர்களின் மனதை கவரவில்லை. இசையில் முழுமையாக கற்றுக்கொள்ளாமல் தயாரித்த ஆல்பம் என்பதால் எதிர்பார்த்த ஆதரவை பெற முடியாமல் போய்விட்டது. நடிகையாக என் படங்கள் மீது அதிகமாக கவனம் செலுத்த வேண்டி உள்ளது. எனவே மியூசிக் ஆல்பம் தயாரிப்பதில் இருந்து கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொள்கிறேன்'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்