'இதுதான் எனக்கு தேவை' - பிரியங்கா சோப்ராவின் இன்ஸ்டாகிராம் பதிவு
பிரியங்கா சோப்ரா தனது மகள் மால்தியை கொஞ்சும் படி உள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.;
ஆஸ்திரேலியா,
2000-ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்றவர் பிரியங்கா சோப்ரா. இவர் தமிழில் விஜய்க்கு ஜோடியாக 'தமிழன்' படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் அதிகமாக வரத்தொடங்கின. பின்னர் பாலிவுட் நடிகையாக உயர்ந்தார். இவர் 2018-ம் ஆண்டு பாடகர் நிக் ஜோனாசை திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.
இந்த நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா தனது அடுத்த ஹாலிவுட் படமான 'தி பிளப்' என்ற படத்தில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து ஜான் சினா மற்றும் இட்ரிஸ் எல்பா ஆகியோருடன் இணைந்து 'ஹெட்ஸ் ஆப் ஸ்டேட்' படத்திலும் நடித்து வருகிறார்.
நடிகை பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் தனது கையில் தனது குழந்தை மால்தியை கொஞ்சும் படி உள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் ஓரிரு நாட்களில் 42 மணி நேரத்திற்கும் கூடுதலாக உலகம் முழுவதும் பயணம் செய்த பிறகு 'எனக்கு இதுவே தேவைப்பட்டது' என்று தனது மகளின் அன்பை பற்றி குறிப்பிட்டுள்ளார்..
.