இன்ஸ்டாகிராமில் பிரியங்கா சோப்ரா பகிர்ந்த புகைப்படங்கள் வைரல்

ஆஸ்திரேலியா சென்றுள்ள பிரியங்கா சோப்ரா தனது புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.;

Update:2024-06-27 18:38 IST

ஆஸ்திரேலியா,

தமிழில் கடந்த 2002-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'தமிழன்' திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார் பிரியங்கா சோப்ரா. அதனைத்தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் அதிகமாக வரத்தொடங்கின. பின்னர் பாலிவுட் நடிகையாக உயர்ந்தார். இவர் 2018-ம் ஆண்டு பாடகர் நிக் ஜோனாசை திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.

இந்த நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா தனது அடுத்த ஹாலிவுட் படமான 'தி பிளப்' என்ற படத்திற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அங்கு தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டுள்ளார். மேலும் தற்போது நடித்து கொண்டிருக்கும் ஆக்ஷன் படத்தில் பணிபுரிந்த அனுபவ காட்சியை கணவர் நிக் ஜோனாசுடன் பகிர்ந்து கொண்டார்.

"தி பிளப்" படப்பிடிப்பில் ஏற்பட்ட காயத்தின் வீடியோ, தனது குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட மனதைக் கவரும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பிரியங்கா தனது காலில் பூண்டு பற்களை தேய்க்கும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார். இந்த அனைத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. பூண்டு பற்களை காலில் தேய்ப்பதை ரசிகர் ஒருவர் இது என்ன செய்யும்? என்று கேட்டார். அதற்கு பிரியங்கா, இது வீக்கம் மற்றும் காய்ச்சலுக்கு உதவுகிறது என்று பதிலளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்