கவர்ச்சி நடிகை மீது போலீசில் புகார்
உர்பி ஜாவேத் மீது நடவடிக்கை எடுக்கும்படி பா.ஜனதா மகளிர் அணியை சேர்ந்த சித்ரா வாக் மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார்.;
இந்தி நடிகை உர்பி ஜாவேத் அரைகுறை உடையில் எடுத்த ஆபாச புகைப்படங்களை வலைத்தளத்தில் தொடர்ந்து வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். இதனால் அவருக்கு எதிர்ப்புகளும் கிளம்பி உள்ளன. சமீபத்தில் துபாயில் கவர்ச்சி உடையில் வீடியோ எடுத்து போலீசில் பிடிபட்டதாக தகவல் வெளியானது. அதை உர்பி ஜாவேத் மறுத்து இருந்தார்.
சமீபத்தில் பதான் படத்தில் தீபிகா படுகோனே காவி நீச்சல் உடை அணிந்து ஷாருக்கானுடன் கவர்ச்சியாக நடனம் ஆடிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தீபிகா படுகோனே மீது போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. ஷாருக்கான் கொடும்பாவி எரிக்கப்பட்டது.
இந்த பிரச்சினையில் தீபிகா படுகோனேவுக்கு உர்பி ஜாவேத் தற்போது ஆதரவு தெரிவித்துள்ளார். அதோடு காவி உடை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து வீடியோ எடுத்தும் வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து உர்பி ஜாவேத் மீது நடவடிக்கை எடுக்கும்படி பா.ஜனதா மகளிர் அணியை சேர்ந்த சித்ரா வாக் மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார்.