'பத்து தல' படத்தின் முதல் பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு

முதல் பாடல் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

Update: 2023-01-31 13:04 GMT

சென்னை,

'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' போன்ற படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு 'பத்து தல' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான 'முஃப்தி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

இதையடுத்து 'பத்து தல' திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு இன்று மாலை 5.04 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் முதல் பாடலான 'நம்ம சத்தம்' பாடல் வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டரை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்