உன்னைப்போல் ஒருத்தி...! நடிகை ஷோபனாவைப் போல் இருக்கும் பிரபலம்

2002 ஆம் ஆண்டில், ரேவதி இயக்கிய மித்ர் மை பிரெண்ட் என்ற ஆங்கிலத் திரைப்படத்தில் நடித்ததற்காக ஷோபனா தனது இரண்டாவது தேசிய விருதைப் பெற்றார்.;

Update:2023-01-10 12:48 IST

சென்னை'

நடிகை ஷோபனாவை போன்று தோற்றமளிக்கும் இளம் பெண்ணின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

1990களில் சோபனா இருந்தது போலவே இவர் இருக்கிறார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. ஷோபனாவை போல் ஒற்றுமையால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவது வேறு யாருமல்ல கர்நாடக பாடகி சிவஸ்ரீ ஸ்கந்தா தான். பாடகியும் நடனக் கலைஞருமான சிவஸ்ரீ தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.

தென்னிந்திய சினிமா உலகில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஷோபனா. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் நடித்து நல்ல வரவேற்பை பெற்றவர். மலையாள திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷோபனா.

பாலச்சந்திர மேனன் இயக்கிய ஏப்ரல் 18 படத்தின் மூலம் மலையாள திரையுலகில் ஷோபனா அறிமுகமானார். 1994 இல், ஷோபனா பாசலின் மணிசித்திரத்தாரில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார்.

2002 ஆம் ஆண்டில், ரேவதி இயக்கிய மித்ர் மை பிரெண்ட் என்ற ஆங்கிலத் திரைப்படத்தில் நடித்ததற்காக ஷோபனா தனது இரண்டாவது தேசிய விருதைப் பெற்றார்.

நடிகை ஷோபனா பரதநாட்டிய நடனக் கலைஞரும் கூட. ஷோபனா இரண்டு தேசிய விருதுகளையும், பல மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.

திரைப்படம் மற்றும் பரதநாட்டியத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி, இந்திய அரசு ஜனவரி 2006 இல் ஷோபனாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிக் கவுரவித்தது.

தமிழில் ஷோபனா எனக்குள் ஒருவன், தளபதி, இது நம்ம ஆளு உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.




Tags:    

மேலும் செய்திகள்