'லியோ' பட டிரெய்லரை வெளியிட்ட திரையரங்குகளுக்கு சிக்கல்: விளக்கம் கேட்டு மத்திய தணிக்கை வாரியம் நோட்டீஸ்

லியோ படத்தின் சென்சார் செய்யப்படாத டிரெய்லரை திரையரங்குகள் எப்படி வெளியிடலாம் என விளக்கம் கேட்டு மத்திய தணிக்கை வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Update: 2023-10-09 13:36 GMT

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் வரும் 19ம் தேதி திரைக்கு வருகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாத நிலையில் கடந்த  5ம் தேதி லியோ படத்தின் டிரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி லியோ திரைப்படத்தின் டிரெய்லர் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.

இதில் விஜய் பேசிய ஆபாச வார்த்தை பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

யூடியூபில் 'லியோ' டிரெய்லர் வெளியிடப்பட்டதால் இந்த டிரெய்லர் சென்சார் செய்யப்படவில்லை. ஆனால் அதே நேரத்தில் இந்த டிரெய்லரை சென்னையில் உள்ள திரையரங்கம் உள்பட தமிழகத்தில் உள்ள ஒரு சில திரையரங்குகள் திரையிட்டன.

இந்த நிலையில் சென்சார் செய்யப்படாத டிரெய்லரை திரையரங்குகள் எப்படி வெளியிடலாம் என விளக்கம் கேட்டு மத்திய தணிக்கை வாரியம் சம்பந்தப்பட்ட திரையரங்குகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் தணிக்கை சான்றிதழ் இல்லாமல் டிரெய்லரை வெளியிட்டது கிரிமினல் அபென்ஸ் என்றும் நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்