பொறாமையோ, வெறுப்போ வேண்டாம் - நடிகர் அஜித்

நடிகர் அஜித், தன்னுடைய மேலாளர் மூலம் வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.;

Update:2022-11-17 17:20 IST

சென்னை,

நடிகர் அஜித், இயக்குனர் எச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணியில் 3-வது முறையாக உருவாகி உள்ள திரைப்படம் 'துணிவு'. இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதைத் தொடர்ந்து நடிகர் அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'ஏகே 62' படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற டிசம்பர் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் அஜித், தன்னுடைய மேலாளர் சுரேஷ் சந்திரா மூலம் வெளியிட்டுள்ள பதிவில், "உங்களை சிறப்பாக இருக்கவும் செயல்படவும் தூண்டுபவர்களை எப்போதும் உங்களைச் சுற்றி வைத்துக்கொள்ளுங்கள். நாடகமோ எதிர்மறை எண்ணங்களோ வேண்டாம். உயர்ந்த இலக்கு மற்றும் உயர்ந்த உந்துதலோடு இருங்கள். நல்ல நேரம், நேர்மறையான ஆற்றல்.

பொறாமையோ வெறுப்போ வேண்டாம். ஒருவருக்கொருவர் உள்ளிருக்கும் சிறப்பை வெளிக்கொண்டு வாருங்கள். வாழு வாழவிடு, நிபந்தனையற்ற அன்புடன் அஜித்" என்று கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்