புதிய தோற்றத்தில் பிரியங்கா சோப்ரா... வைரலாகும் புகைப்படம்
பிரியங்கா சோப்ரா தற்போது ‘தி பிளப்' என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார்.;
சென்னை,
தமிழில் விஜய் ஜோடியாக 'தமிழன்' படம் மூலம் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்த பிரியங்கா சோப்ரா, பாப் பாடகர் நிக் ஜோனசை மணந்து அமெரிக்காவில் குடியேறி ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது 'தி பிளப்' என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். இதில் கடல் கொள்ளைக்காரி கதாபாத்திரத்தில் வருகிறார். 19-ம் நூற்றாண்டில் மெர்சல் என்ற பெண் தனது குடும்பத்தை காப்பாற்ற போராடும் கதையம்சத்தில் அதிரடி சண்டை சாகச படமாக உருவாகிறது.
இதில் மெர்சல் கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். தற்போது அவரது கதாபாத்திரம் சம்பந்தமான ஒரு புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. இதில் மோஹக் ஹேர் ஸ்டைலுடன் இருக்கும் பிரியங்கா சோப்ரா தோற்றம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
இந்த ஹேர் ஸ்டைலை பார்த்து என்ன இருந்தாலும் பிரியங்கா சோப்ராவுக்கு துணிச்சல் அதிகம் என்று பலரும் பேசுகின்றனர். இந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகிறது