நான் பகல் இரவு...நீ கதிர் நிலவு...நயன் தாரா - விக்னேஷ் லேட்டஸ் கிளிக்...!
இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது மனைவி நயன்தாராவுடன் எடுத்த புதிய புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
சென்னை,
விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில், தனது மனைவி நயன்தாராவுடன் இருக்கும் ஒரு புதிய படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் இந்த ஜோடியைப் பார்த்து நாங்கள் பிரமிக்கிறோம் என ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
அவர்கள் கேமராவைப் பார்க்கும்போது அவர்கள் அன்பான அரவணைப்பைப் பகிர்ந்துகொள்வதைக் காட்டும் அபிமான புகைப்படத்தை இயக்குனர் பதிவிட்டுள்ளார் என கூறி வருகின்றனர்.
விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் ஜூன் 9-ம் தேதி திருமணம் முடிந்து சமீபத்தில் தேனிலவு முடிந்து இருவரும் தாயகம் திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.