ரஜினிகாந்தின் 169வது படம்: மூன்று மொழிகளின் சூப்பர் ஸ்டார்கள் இணையும் ஜெயிலர்

ஜெயிலர் ஏப்ரல் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தற்போது படம் பற்றிய ஒரு முக்கிய அப்டேட் வந்துள்ளது.

Update: 2023-01-06 10:06 GMT

சென்னை

நடிகர் ரஜினிகாந்தின் 169வது படம் ஜெயிலர். விஜய் நடித்த பீஸ்ட் படத்ததை அடுத்து நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ஜெயிலர். இதில், ரம்யா கிருஷ்ணன், சிவா ராஜ்குமார், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிரது

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். முத்துவேல் பாண்டியன் என்ற வேடத்தில் ரஜினி நடிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக தமன்னா நடிக்கிறார்.

இப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தற்போது படம் பற்றிய ஒரு முக்கிய அப்டேட் வந்துள்ளது.

தமிழில் முன்னணி வர்த்தக ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஜெயிலர் படத்தில் மோகன்லால் கெஸ்ட் ரோலில் தோன்றுகிறார். மோகன்லால் ஓரிரு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் இருப்பார் என்றும் அவருக்கு ஒரு சிறிய வேடம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது நடந்தால் மோகனலால் - ரஜினிகாந்த இணையும் முதல் படம் ஜெயிலர். மேலும், மூன்று மொழிகளின் சூப்பர் ஸ்டார்கள் இணையும் முதல் படம் என்ற பெருமையையும் ஜெயிலர் படம் பெறும். ஜெயிலர் படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.



Tags:    

மேலும் செய்திகள்