''நாட்டு நாட்டு' பாடல் என்னுடைய சிறந்த படைப்பு கிடையாது' -இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி

'நாட்டு நாட்டு' பாடல் தன்னுடைய சிறந்த படைப்பு கிடையாது என்று எம்.எம் கீரவாணி கூறியுள்ளார்.;

Update:2024-07-10 21:06 IST

சென்னை,

ராம் சரண், ஜுனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது.

இப்படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது. இப்படத்திற்கு பிரபல இசையமைப்பலர் எம்.எம் கீரவாணி இசையமைத்திருந்தார். இந்நிலையில், ஆஸ்கர் விருது வென்ற 'நாட்டு நாட்டு' பாடல் தன்னுடைய சிறந்த படைப்பு கிடையாது என்று எம்.எம் கீரவாணி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

'பாகுபலி முதல் மற்றும் 2ம் பாகங்களுக்கான என்னுடைய இசையை ஒப்பிடும்போது, ஆஸ்கர் விருது பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் என்னுடைய சிறந்த படைப்பு கிடையாது. தாமதமாகவோ, முன்பாகவோ எனக்கு ஒரு பாடலுக்காக உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. உங்களுக்கான அங்கீகாரம் ஏதோ ஒருவகையில் எங்கிருந்தாவது வந்து சேரும்,' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்