'மாஸ்டர்' படத்தின் நீக்கப்பட்ட காட்சி: இணையத்தில் வைரல்
'மாஸ்டர்' படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி வெளியாகியுள்ளது.;
சென்னை,
கடந்த 2021ம் ஆண்டில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் 'மாஸ்டர்'. விஜய் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. ரூ. 200 கோடிக்கு மேல் வசூலித்தது.
இந்நிலையில், இப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி வெளியாகியுள்ளது. இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் 'மாஸ்டர்' படம் ஐரோப்பாவில் ரீ - ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
தற்போது விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் 'கோட்' படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான 'விசில்போடு' வெளியானது. படத்தின் இரண்டாவது பாடல் விஜய்யின் பிறந்தநாளான, வரும் 22-ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.