சினிமாவில் நடிக்கக்கூடாது துல்கர் சல்மானை தடுத்த மம்முட்டி

சினிமாவில் நடிக்கக்கூடாது என தனது தந்தை நடிகர் மம்முட்டி தடுத்ததாக துல்கர் சல்மான் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.;

Update: 2022-08-10 08:42 GMT

தென் இந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகனாக வளர்ந்துள்ள துல்கர் சல்மான் பிரபல மலையாள நடிகர் மம்முட்டியின் மகன். இவர் தமிழில் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் அறிமுகமாகி கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஹேய் சினாமிகா போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

மலையாளத்தில் அதிக படங்களில் நடித்துள்ளார். தற்போது துல்கர் சல்மான் நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் சீதாராமம் படம் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் நடிகரான அனுபவம் குறித்து துல்கர் சல்மான் அளித்துள்ள பேட்டியில், "நான் சினிமாவில் நடிக்க முயற்சி செய்கிறேன் என்றதும் அப்பாவுக்கு கோபம் வந்தது. அதற்கு முன்பு அவரை அவ்வளவு கோபமாக நான் பார்த்தது இல்லை. எனக்கும், தந்தைக்கும் பெரிய சண்டையே நடந்தது. சினிமாவில் நடிக்க வந்து எனது மானத்தை வாங்காதே என்றார்.

இதற்கு முன்பு நீ எப்போதாவது நடனம் ஆடியோ, நடிக்க விரும்பியோ நான் பார்த்தது இல்லை. நடிப்பு என்றால் நீ நினைக்கிற மாதிரி சாதாரண விஷயம் இல்லை. நடிக்கும் ஆசையை இத்தோடு விட்டுவிடு என்றார். பயங்கரமாக திட்டினார். அவருக்கு நான் நடிப்பதில் விருப்பம் இல்லை. அவரது எதிர்ப்பை மீறியே நடிக்க ஆரம்பித்தேன்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்