படக்குழுவினருக்கு உணவு பரிமாறிய மம்முட்டி, ஜோதிகா - வைரலாகும் புகைப்படம்..!

நடிகை ஜோதிகா, தற்போது மம்முட்டியுடன் இணைந்து 'காதல் - தி கோர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Update: 2022-11-19 10:26 GMT

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான ஜோதிகா, தற்போது நடிகர் மம்முட்டியுடன் 'காதல் - தி கோர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். மம்முட்டி கம்பெனி தயாரிக்கும் இந்த படத்தை மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்குகிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த நிலையில் தற்போது நடிகர் மம்முட்டி 'காதல் தி கோர்' படத்தில் தன்னுடைய காட்சிகளை நடித்து முடித்துள்ளார். இதையடுத்து நேற்று படத்தில் பணியாற்றிய சக ஊழியர்களுக்கு மம்முட்டியும் ஜோதிகாவும் உணவு பரிமாறினர்.

இது தொடர்பான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நடிகர் மம்முட்டி, "காதல் தி கோர் படத்தில் எனது பகுதிகளை நிறைவு செய்தேன். மிகவும் துடிப்பான குழுவுடன் பணிபுரிந்ததில் மகிழ்ச்சி" என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.


Tags:    

மேலும் செய்திகள்