விஜய்சேதுபதியின் 'காந்தி டாக்ஸ்' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு

விஜய்சேதுபதி 'காந்தி டாக்ஸ்' படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளார்.;

Update: 2024-10-02 14:22 GMT

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய்சேதுபதி. இவர் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் கொண்டவர். சமீபத்தில் வெளியான இவரது 50-வது படம் 'மகாராஜா'. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் தற்போது, இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 'டிரெயின்' என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஆறுமுககுமார் இயக்கத்தில் 'ஏஸ்' என்ற படத்திலும், வெற்றி மாறனின் 'விடுதலை 2' படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

இந்தநிலையில், இந்தியில் 'காந்தி டாக்ஸ்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கியுள்ளார். மேலும் விஜய் சேதுபதியுடன் அரவிந்த்சாமி, அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த 2022ம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கமலின் பேசும் படம் போன்று இந்த படத்தை மவுன படமாக எடுத்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இந்தநிலையில் இன்று காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த 'காந்தி டாக்ஸ்' படத்தின் இரண்டு நிமிட மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளார் விஜய் சேதுபதி. அதோடு, இன்று முக்கியமான குரல், மூலை முடுக்கெல்லாம் விரைவில் எதிரொலிக்கும் குரல்! அனைவருக்கும் காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள். மேலும் அதில் 'காந்தி டாக்ஸ்' படம் விரைவில் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்