டோக்கியோவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் 'மாமனிதன்' படத்துக்கு கோல்டன் விருது..!
டோக்கியோவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் 'மாமனிதன்' திரைப்படம் கோல்டன் விருது பெற்றுள்ளது.;
சென்னை,
இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் "மாமனிதன்". இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்திருந்தனர்.
யுவன் சங்கர் ராஜா தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்திருக்கிறார். மாமனிதன் இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மாமனிதன் திரைப்படத்தை பார்த்த திரைப்பிரபலங்கள் பலர் இயக்குனர் சீனுராமசாமியை பாராட்டினர்.
இந்த நிலையில், இந்த திரைப்படம் டோக்கியோவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் சிறந்த ஆசிய திரைப்படம் எனும் கோல்டன் விருதைப் பெற்றுள்ளது. இதுகுறித்து இயக்குனர் சீனு ராமசாமி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.