பழம்பெரும் நடிகரும் தயாரிப்பாளருமான மோகன் நடராஜன் காலமானார்
மோகன் நடராஜன் மறைவைத் தொடர்ந்து நடிகர் சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.;
சென்னை,
விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகரும் தயாரிப்பாளருமான மோகன் நடராஜன் தனது 71-வது வயதில் காலமானார். இவர் விஜய்யின் கண்ணுக்குள் நிலவு, அஜித்தின் ஆழ்வார், சூர்யாவின் வேல், விக்ரமின் தெய்வ திருமகள் உள்ளிட்ட படங்களை தயாரித்திருக்கிறார். மேலும், சிட்டிசன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் வில்லனாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
பழம்பெரும் நடிகரானமோகன் நடராஜன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தநிலையில், அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ளது. பின்னர், இன்று மாலை 5க்கு மேல் திருவெற்றியூரில் நல்லடக்கம் செய்ய உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மோகன் நடராஜன் மறைவைத் தொடர்ந்து நடிகர் சூர்யா, இயக்குனர் வாசு உள்ளிட்ட பிரபலங்கள் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.