சிறுமிகள் முன் நிர்வாணமாக நின்ற பிரபல வில்லன் நடிகர் கைது

திருச்சூரில் இரண்டு குழந்தைகள் முன் நிர்வாணமாக நின்றதாக நடிகர் ஸ்ரீஜித் ரவியை கேரள போலீசார் இன்று கைது செய்தனர்.

Update: 2022-07-07 05:50 GMT

திருச்சூர்

கேரள மாநிலம் திருச்சூர் அய்யந்தோளில் உள்ள எஸ்.என்.பார்க்கின் அருகே காரில் வந்த ஒருவர் குழந்தைகள் முன் நிர்வாணமாக காட்சி அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த நபரை குழந்தைகளால் நபரின் பெயரை குறிப்பிட முடியவில்லை. இதுகுறித்து குழந்திகளில் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

அந்த பகுதியில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்த் சம்பந்தபட்ட நப்ரின் கார் கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளி அடையாளம் காணப்பட்டார்.

அந்த நபர் நடிகர் ஸ்ரீஜித் ரவி ஆவார். இதை தொடர்ந்து போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இதற்கிடையில், ஸ்ரீஜித் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு மருந்து உட்கொண்டு வருவதாகவும் வாக்குமூலம் அளித்தார்.

2016 ஆம் ஆண்டில், மாணவர்கள் குழு ஒன்று தங்கள் பள்ளிக்கு நடந்து சென்றபோது, காருக்குள் நிர்வாணம் காட்டியதற்காக பாலக்காடு போலீசாரல் ஸ்ரீஜித் கைது செய்யப்பட்டார். பள்ளி செல்லும் குழந்தைகளுடன் புகைப்படம் எடுக்கவும் அவர் முயன்றதாக கூறப்படுகிறது.

மலையாள நடிகர் ஸ்ரீஜித் ரவி பிரபல மலையாள நடிகர் டிஜி ரவியின் மகன் ஆவார். தமிழில் அசுரவதம் , ஆயிரத்தில் இருவர்,கதகளி,மதயானை கூட்டம்,வேட்டை, கும்கி உள்பட பல படங்களில் நடித்து உள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்