'புஷ்பா 2'வுடன் மோத வரும் கீர்த்தி சுரேசின் 'ரகு தாத்தா'
கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'ரகு தாத்தா' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். தற்போது, ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் 'ரகு தாத்தா' என்ற திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சுமன் குமார் எழுதி இயக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், 'ரகு தாத்தா' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் ஆகஸ்ட் 15 அன்று திரைக்கு வர உள்ளது. இது குறித்த அறிவிப்பை படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.
அதே நாளில்தான் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் 'புஷ்பா 2 தி ரூல்' படமும் வெளியாக உள்ளது. இவ்விரு படங்களும் ஒரே நாளில் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.