கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் 'கண்ணிவெடி' படம் பூஜையுடன் தொடக்கம்

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘கண்ணிவெடி’ திரைப்படம் பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.

Update: 2023-07-15 16:45 GMT

சென்னை,

இந்த ஆண்டு கீர்த்தி சுரேஷ் 'தசரா', 'மாமன்னன்' ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக 'கண்ணிவெடி' என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

அறிமுக இயக்குநர் கணேஷ் ராஜ் இயக்கும் இந்த திரைப்படம், தொழில்நுட்பம் சார்ந்து சமூகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக்காட்டும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த படம் இன்று பூஜையுடன் தொடங்கியதாக பட நிறுவனம் அறிவித்துள்ளது.


 

Tags:    

மேலும் செய்திகள்