தமிழில் தாம்தூம், தலைவி படங்களில் நடித்து பிரபலமான கங்கனா ரணாவத், தற்போது சந்திரமுகி 2-ம் பாகத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தியில் அதிக சம்பளம் பெறும் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். வலைதளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துகளை பகிர்ந்தும் பரபரப்பு ஏற்படுத்துகிறார்.
இந்த நிலையில் தற்போது 2 இந்தி நடிகர்கள் மீது கங்கனா புகார் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, "திரைப்பட மாபியாக்கள் எப்போதும் என்னை கண்காணிக்கின்றனர். நான் ஏற்கனவே காதலித்த ஒரு இந்தி நடிகர் போலியான சமூக வலைதள கணக்கை பயன்படுத்தி என்னிடம் உரையாடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். ஒருமுறை எனது வலைதள கணக்கை முடக்கினார். என்னை மிரட்டவும் செய்தார். இதுபோல் எப்போதும் பெண்களுடன் சுற்றும் இந்தி நடிகர் ஒருவர் என் வீட்டுக்கே வந்து தன்னை காதலிக்குமாறு கெஞ்சினார். என்னை பல இடங்களில் ரகசியமாக பின்தொடர்ந்தார். அவரை நான் புறக்கணித்து விட்டேன்'' என்றார்.