மோகன்லாலுடன் நடிக்கும் கமல்?
மலைக்கோட்டை வாலிபன் படத்தில் மோகன்லாலுடன் கவரவ தோற்றத்தில் கமல்ஹாசன், ஜீவா ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மலையாளத்தில் 'ஜல்லிக்கட்டு' படத்தை இயக்கி பிரபலமான லிஜோ ஜோஸ் பெல்லிசேரி டைரக்டு செய்யும் புதிய படத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இந்த படத்துக்கு 'மலைக்கோட்டை வாலிபன்' என்று பெயர் வைத்துள்ளனர். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.சமீபத்தில் ராஜஸ்தான் சென்று முக்கிய காட்சிகளை படமாக்கினர்.
இந்த நிலையில் மலைக்கோட்டை வாலிபன் படத்தில் மோகன்லாலுடன் கவரவ தோற்றத்தில் கமல்ஹாசன், ஜீவா ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரையும் படக்குழுவினர் அணுகி பேசி வருவதாகவும் அவர்கள் நடிக்க சம்மதிப்பார்கள் என்றும் அடுத்த மாதம் படப்பிடிப்பில் கமல்ஹாசனும், ஜீவாவும் இணைவார்கள் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே கமல்ஹாசன் நடித்து 2009-ல் திரைக்கு வந்த 'உன்னைப்போல் ஒருவன்' படத்தில் மோகன்லால் நடித்து இருந்தார். இதுபோல் விஜய், மோகன்லால் நடித்து இருந்த 'ஜில்லா' படத்தின் பாடல் காட்சியொன்றில் ஜீவா தோன்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கமல்ஹாசன் 'இந்தியன்-2' படத்தில் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்திலும் நடிக்க உள்ளார்.