கமல்ஹாசன் படத்தில் மீண்டும் நடிக்க வந்த மகிழ்ச்சியில் காஜல்

குதிரை பயிற்சி செய்யும் வீடியோவை வலைத்தளத்தில் காஜல் அகர்வால் பகிர்ந்து அதில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘எனக்கு குழந்தை பிறந்த பிறகு மீண்டும் நடிக்க வந்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

Update: 2022-09-22 03:31 GMT

காஜல் அகர்வாலை இந்தியன் 2 படத்துக்கு ஒப்பந்தம் செய்து சில காட்சிகளை படமாக்கிய பிறகு அவர் கர்ப்பமானதால் படத்தில் இருந்து நீக்கி விட்டதாக தகவல் பரவியது. இதனை காஜல் அகர்வால் மறுத்ததுடன் அந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிப்பதை உறுதி செய்தார்.

இந்த நிலையில் குதிரை பயிற்சி செய்யும் வீடியோவை வலைத்தளத்தில் காஜல் அகர்வால் பகிர்ந்து அதில் வெளியிட்டுள்ள பதிவில், ''எனக்கு குழந்தை பிறந்த பிறகு மீண்டும் நடிக்க வந்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. எனது உடல் முன்பு போல் இல்லை. பிரசவத்துக்கு முன்பு தொடர்ந்து உடற்பயிற்சி செய்ததால் அதிக நாட்கள் என்னால் வேலை செய்ய முடிந்தது.

ஆனால் குழந்தை பிறந்த பிறகு உடலில் மீண்டும் பழைய ஆற்றலை கொண்டு வருவது கஷ்டமாக உள்ளது. முன்பு போல உடல் ஒத்துழைக்கவில்லை. உடல் மாறலாம். ஆனால் ஆர்வம் எப்போதும் மாறாதது என்பதை நமக்குள் உணர்த்த வேண்டும். எதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும், எதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். இந்தியன் 2 படத்தில் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. சினிமா துறையை எனது வீடு போல நினைக்கிறேன். சினிமாவில் இருப்பதை அதிர்ஷ்டமாகவும் கருதுகிறேன்" என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்