ஐ லவ் யூன்னு சொல்லு...! பெட்ரூம்ல பிரேம் போட்டு மாட்டி வைப்பேன்...! ரசிகருக்கு ஷாக் கொடுத்த மாளவிகா மோகனன்...!

ஐ லவ் யூன்னு சொல்லு...! பெட்ரூம்ல பிரேம் போட்டு மாட்டி வைப்பேன் என ரசிகர் கேட்ட கேள்விக்கு ஷாக் கொடுத்த மாளவிகா மோகனன்...!

Update: 2022-06-25 05:48 GMT

சென்னை

நடிகை மாளவிகா மோகனன் அடிக்கடி தனது ரசிகர்களுடன் ஜாலியாக கலந்து உரையாடுவார். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஜாலியாக பதில் அளிப்பார்.

மாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனனிடம் ரசிகர் ஒருவர் நடிகர் விஜய்க்கு நீங்க அனுப்பிய லாஸ்ட் மெசேஜ் என்னவென்று எழுப்பிய கேள்விக்கு வீடியோ மூலம் பதிலளித்த மாளவிகா மோகனன் ஹேப்பி பர்த்டே என சொன்னதும் விஜய் ரசிகர்கள் அந்த வீடியோவை அதிக அளவில் ஷேர் செய்தும் ரீட்வீட் செய்தும் வருகின்றனர். மீண்டும் விஜய்க்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் தங்களது ஆசையை கூறி வருகின்றனர்.

மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி, பகத் பாசில், சூர்யா நடித்த விக்ரம் படத்தை பற்றி ஏதாவது சொல்லுங்க என ரசிகர் ஒருவர் கேட்க, விக்ரம் படம் ரொம்பவே புடிக்கும். என்னவொரு காஸ்டிங், என்னவொரு பிஜிஎம் என பாராட்டித் தள்ளி உள்ளார் நடிகை மாளவிகா மோகனன்.

மலையாள திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளர் மோகனனின் மகளான நடிகை மாளவிகா மோகனன் கும்பகோணத்திற்கு எப்போ வருவீங்க என ஒரு ரசிகை கேட்க, தமிழ்நாட்டிலேயே எனக்கு பிடித்த இடம் கும்பகோணம் தான் என்றும் அங்கே திரும்பிய பக்கமெல்லாம் கோயில்கள் இருப்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று என்று பதில் அளித்துள்ளார்.

வாசிம் எனும் ரசிகர் ஒருவர் நடிகை மாளவிகா மோகனனிடம் நைசக நீங்க எனக்கு ஐ லவ் யூன்னு மட்டும் சொல்லுங்க.. அதை என் பெட்ரூம்ல பிரேம் போட்டு மாட்டி வைப்பேன் என்று சொன்னதும், உடனடியாக ஐ லவ் யூ சொல்லி அவருக்கு ஷாக் கொடுத்திருக்கிறார் மாளவிகா மோகனன். மேலும், அனிருத்தின் இசை பிடிக்கும், சீக்கிரமே தெலுங்கு படத்திலும் அறிமுகமாகுவேன் என ஏகப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்