சித்திவிநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை - புகைப்படம் வைரல்
சித்திவிநாயகர் கோவிலில் நடிகை ஜான்வி கபூர் சாமி தரிசனம் செய்தார்.;
மும்பை,
பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் மராத்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற சைரத் படத்தின் இந்தி டப்பிங் படமான தடக் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார். திருமணமாகி வீட்டை விட்டு வெளியூருக்கு சென்று வாழ்ந்து வரும் ஜோடியினரை சாதி வெறியால் தேடிச் சென்று வெட்டுவது போன்ற கவுரவக் கொலையை அடிப்படையாகக் கொண்டு உருவான கதையில் முதன் முறையாக நடித்து கவனத்தை ஈர்த்தார் ஜான்வி கபூர்.
ஆர்ஆர்ஆர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு ஜுனியர் என்.டி.ஆர். நடித்து வரும் தேவரா படத்தில் நடித்து வரும் ஜான்வி கபூர் அடுத்ததாக ராம்சரண் நடிப்பில் உருவாகும் ஆர்சி 16 படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்நிலையில், குடி பத்வா பண்டிகையை முன்னிட்டு நடிகை ஜான்வி கபூர் மும்பையில் உள்ள சித்திவிநாயகர் கோவிலுக்கு இன்று அதிகாலை சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
அப்போது, கோவிலுக்கு அவர் வெறுங்காலில் நடந்து சென்றுள்ளார். இது குறித்தான புகைப்படம் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. ஜான்வி கபூர் அவ்வப்போது கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார். இதன் மூலம் ஆன்மிக பாதையில் தொடர்ந்து இருக்கிறார் என்பது தெரிகிறது.