அம்மாவின் பிறந்தநாள் - திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த ஜான்வி கபூர்

இன்று பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவியின் 61வது பிறந்தநாள்.;

Update:2024-08-13 16:00 IST

பெங்களூரு,

பிரபல பாலிவுட் நடிகை ஸ்ரீதேவி. இவர் கடந்த 2018-ம் ஆண்டு தனது 54-வது வயதில் காலமானார். இவரது மகள் ஜான்வி கபூர். இவர் இந்தி படங்களில் நடித்து வருகிறார். தற்போது தேவரா என்ற படம் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகி இருக்கிறார். அடுத்து தமிழ் படத்தில் நடிக்க கதை கேட்கிறார். இவர் ஆன்மிகத்தின் மீது அதிக நாட்டம் கொண்டவர். அதனால் அடிக்கடி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்.

அதன்படி, இன்று தனது அம்மா ஸ்ரீதேவியின் 61வது பிறந்தநாளை முன்னிட்டு ஜான்வி கபூர் திருப்பதியில் உள்ள பாலாஜி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதனுடன், 'இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா, ஐ லவ் யூ', என்று பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது. அதில், ஜான்வி கபூருடன், அவரது காதலர் என்று வதந்தி பரப்பப்பட்ட ஷிகர் பகாரியாவும் உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்