வசூலில் பட்டையை கிளப்பும் ஜெயிலர்...! ரூ.400 கோடியை நெருங்குகிறது...!

நாளை விடுமுறை தினம் என்பதால் ஜெயிலர் வசூல் ரூ.400 கோடியை நெருங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.;

Update:2023-08-14 13:45 IST

சென்னை,

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.  தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

நான்கே நாட்களில் ஜெயிலர் இந்தியாவில் 146.40 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. வர்த்தக அறிக்கைகளின்படி, இப்படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடியைத் தாண்டி பல வசூல் சாதனைகளை முறியடித்துள்ளது.

வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா வெளியிட்டு உள்ள டுவிட்டர் பதிவில், "நான்கு நாட்களில் ஜெயிலர் மொத்த வசூல் ரூ.300 கோடிக்கு மேல்" என தெரிவித்து உள்ளார்.

நான்கு நாட்கள் முடிவில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ.32 கோடியும், கேரளாவில் ரூ.23 கோடியும், கர்நாடகாவில் ரூ.27 கோடியும், இதர மாநிலங்களில் ரூ.6 கோடியும், வெளிநாடுகளில் மட்டும் ரூ.135 கோடியும் ஜெயிலர் திரைப்படம் வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. நாளை விடுமுறை தினம் என்பதால் ஜெயிலர் வசூல் ரூ.400 கோடியை நெருங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்