தனிமையில் இருப்பது நல்லது - நடிகை சதா
பலவந்தமான உறவுகளில் மாட்டிக் கொள்வதை விட ”தனியாக இருப்பதே நல்லது'' என்று என நடிகை சதா தனது வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.;
தமிழில் ஜெயம், வர்ணஜாலம், அந்நியன், பிரிய சகி, திருப்பதி, உன்னாலே உன்னாலே உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சதா. தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். சதாவுக்கு 38 வயது ஆகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. தற்போது சதா வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''சில தேவைகளுக்காக இருக்கும் உறவுகளில் மாட்டிக் கொண்டு அந்த மனிதர்கள் நம்மை விட்டு பிரிந்து விடுவார்களோ என எதற்கு பயப்படுகிறீர்கள். நம்மை நெருக்கமானவர்களாக பார்க்காதவர்கள் நம்மை விட்டு விலகி இருப்பது தான் நல்லது. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மட்டும்தான் உங்களுக்கு துணையாக இருப்பீர்கள்.
நமது வாழ்க்கையில் எத்தனையோ பேர் வருவார்கள் போவார்கள். இது போன்ற மனிதர்களை நினைத்து உங்கள் வாழ்க்கையை சிக்கலாக்கி கொள்ளாதீர்கள். உங்களுக்கு பிடித்தவர்களோடு நெருக்கமாக இருப்பதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உங்களோடு நிற்க முடியாதவர்களை பற்றி நீங்கள் கவலைப்படுவதும் உங்களுக்கு நல்லது அல்ல. ஒவ்வொரு முறை இது போன்ற மனிதர்களை நமது வாழ்க்கையில் இருந்து வழி அனுப்பி விட்டால்தான் நல்லது.
தவறான மனிதர்களுக்காக வாழ்க்கையை வீணாக்கிக் கொள்ள வேண்டாம். பலவந்தமான உறவுகளில் மாட்டிக் கொள்வதை விட தனியாக இருப்பதே நல்லது'' என்று கூறியுள்ளார். சதாவின் பதிவை பார்த்த ரசிகர்கள் அவரை இந்த அளவுக்கு வருத்தப்பட வைத்த மனிதர் யார்? சதா வாழ்க்கையில் இருந்து வெளியேறிய அந்த மனிதர் யார்? சதா இனி தனிமையிலேயே இருப்பாரா? திருமணம் செய்து கொள்ள மாட்டாரா. யாரைப் பற்றி பதிவு வெளியிட்டுள்ளார் என்றெல்லாம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.