நாவலில் இருந்து திருடப்பட்டதா 'எலக்சன்' திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

‘எலக்சன்’ படத்தின் திரைக்கதையை தனது ‘மடவளி’ நாவலில் இருந்து எடுத்திருப்பதாக, எழுத்தாளர் கவிப்பித்தன் குற்றம் சாட்டியிருக்கிறார்.

Update: 2024-05-20 09:52 GMT

தமிழ் சினிமாவில் எழுத்தாளராக அறிமுகமாகி பின்னர் நடிகராகி, இன்று வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக தன்னை முன்னிறுத்தி இருக்கும் நபர் விஜய்குமார். அவரது முதல் படமாக உறியடி படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் விஜய்குமார். 2016-ம் ஆண்டு வெளியான உறியடி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து உறியடி 2-ம் பாகம் வெளியானது. நடிகர் சூர்யா இப்படத்தை தயாரித்து இருந்தார்.

இதையடுத்து, விஜய் குமார் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் தான் எலக்சன். இப்படத்தை தமிழ் இயக்குகிறார். இவர் பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான பா ரஞ்சித் தயாரித்த சேத்துமான் படத்தை இயக்கியவர் ஆவார். இது அவர் இயக்கும் இரண்டாவது திரைப்படமாகும்.

எலக்சன் படத்தின் திரைக்கதையை தன் நாவலிலிருந்து எடுத்து தன்னை ஏமாற்றிவிட்டதாக எழுத்தாளர் கவிப்பித்தன் குற்றம் சாட்டியுள்ளார். எலக்சன் திரைக்கதைக்கான அடிப்படை தான் எழுதிய மடவளி என்ற நாவல்தான் என்றும், இந்தப் படத்திற்கும் நாவலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என இயக்குநரால் சொல்ல முடியுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

சேத்துமான் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ், இயக்கத்தில் மே 17ஆம் தேதி எலக்சன் திரைப்படம் வெளியானது. உறியடி புகழ் விஜயகுமார் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, பாவெல், ஜார்ஜ் மரியான், திலீபன், பிரீத்தி அஷ்ரானி உள்ளிட்டோர் உடன் நடித்துள்ளனர்.

உள்ளூர் தேர்தலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கதை. நேரடியாகவும் மறைமுகமாகவும் மக்களின் வாழ்க்கையில் உள்ளூர் தேர்தல் ஏற்படுத்தும் தாக்கத்தை இத்திரைப்படம் மூலம் இயக்குநர் காண்பித்துள்ளார். இந்நிலையில், எலக்சன் திரைப்படம் தன்னுடைய மடவளி நாவலிலிருந்து தழுவி எழுதப்பட்டதாகவும் திரைக்கதைக்கான அடித்தளம் தன்னுடையது எனவும் எழுத்தாளர் கவிப்பித்தன் குற்றம் சாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்