கோவை சரளா நடித்துள்ள 'செம்பி' படத்தின் டிரைலர் வெளியீடு..!
நடிகை கோவை சரளா நடித்துள்ள 'செம்பி' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.;
சென்னை,
இயக்குனர் பிரபு சாலமன் 'காடன்' திரைப்படத்திற்குப் பிறகு இயக்கியுள்ள திரைப்படம் 'செம்பி'. கோவை சரளா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் 'செம்பி' படத்தில் அஸ்வின் குமார், ரேயா, தம்பி ராமையா, நிலா என்ற 10 வயது குழந்தை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகியுள்ள இந்த படத்தை டிரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏஆர் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். ஜீவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலரை இயக்குனர் செல்வராகவன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இந்த டிரைலர் தற்போது வைரலாகி வருகிறது.