எடுக்க கூடாத இடத்தில் ஆபாச வீடியோ எடுத்த பிரபல கவர்ச்சி நடிகை கைது...!
உர்பி துபாய் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் நேற்று வெளியானது.;
மும்பை
'பிக் பாஸ் புகழ் உர்பி ஜாவேத் தனது வித்தியாசமான பேஷன் ஆடைகளுக்காக பிரபலமானவர். அவருடைய தனித்துவமான ஆடைகள் பெரும்பாலும் ஆச்சரியப்படவைக்கும். கயிறுகள், கம்பிகள், கற்கள், உடைந்த கண்ணாடிகள் அல்லது பூ இதழ்கள் போன்றவற்றைத் தேர்ந்தெடுத்து தனது உடலை மறைத்து புகைப்படங்களாக வெளியிடுவார்.
முழு டிரஸ்ஸை அணிந்து இவர் போட்டோ போட்டதாக தெரியவில்லை. இவரது டிரஸ், ஆடை வடிவமைப்பாளர்களுக்கே அலர்ஜியை தந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் உர்பி துபாய் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் நேற்று வெளியானது. மருத்துவமனையில் இருந்தபடி உர்பியே ஒரு வீடியோவையும் பதிவிட்டிருந்தார்.
குரல்வளை அழற்சி பாதிப்பு காரணமாக, சிகிச்சை பெறுவதாக கூறியிருந்தார். அந்த வீடியோவிலிருந்து எடுக்கப்பட்ட அவரது போட்டோக்களும், சம்மூக வலைதலங்களில் வைரலாகி வருகின்றன. அந்த வீடியோவில் அவர் பேசும்போது, உர்பி ஜாவேத்தின் குரல் பாதிக்கப்பட்டிருப்பதும், அவருக்கு குரல்வளை அழற்சி பாதிப்பு ஏற்பட்டிருப்பதும் தெரியவருகிறது. அவருக்கு பின்னால் டாக்டர் நிற்கிறார். அவருடன் உர்பி பேச முயல்கிறார். ஆனால் அவரால் பேசமுடியவில்லை.
உர்பியின் மருத்துவமனை போட்டோக்களை பார்த்து அவரது ரசிகர்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர். விரைவில் குணமாகவேண்டுமென அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்தபடி இருந்தனர்.
இந்நிலையில், உர்பி கைதானார் என்று திடீரென செய்திகள் வெளியாகி உள்ளன.. இதற்கு காரணம், துபாயில் ஒரு வீடியோவை எடுத்துள்ளார். தன்னுடைய இன்ஸ்டாகிராமுக்காக துபாயில் அந்த வீடியோவை எடுத்துள்ளார். ஆனால், அவர் அணிந்திருந்த "டிரஸ்ஸில்" வழக்கம்போல் சர்ச்சை இருந்தாலும், அவர் அந்த வீடியோவை எங்கு எடுத்தார் என்பதுதான் சிக்கலாகி உள்ளது.
கவர்ச்சிகரமான ஆடைகளுடன் நடமாட தடை உள்ள பகுதியில், அளவுக்கு அதிகமான கவர்ச்சியுடன் டிரஸ் அணிந்து வீடியோ ஷூட் செய்துள்ளார். இதுகுறித்த புகார் போலீசுக்கு பறந்த நிலையில், உடனடியாக வந்த போலீசார் உர்பியை கைது செய்துள்ளதாக தெரிகிறது. அவரிடம் விசாரணையும் நடக்கிறது.
எப்போதுமே பரபரப்புக்காக எதையும் செய்யக்கூடிய உர்பி இந்த வீடியோவையும் பரபரப்புக்காக வேண்டுமென்றே ஷூட் செய்தாரா? அல்லது அந்த இடம் தடை செய்யப்பட்ட பகுதி என்பது உண்மையிலேயே உர்பிக்கு தெரியவில்லையா? என தெரியவில்லை. எந்த ஆபாசம் உர்பியை உச்சத்துக்கு கொண்டு போனதோ, அதே ஆபாசம் தான், இன்று ஜெயில் வரை கொண்டுபோய் விட்டுள்ளதாக தெரிகிறது.