'கல்கி 2898 ஏடி', 'மஞ்சுமல் பாய்ஸ்' இல்லை...பட்ஜெட்டை விட 45 மடங்கு லாபம் பெற்ற ஒரே படம்

இந்த ஆண்டு சிறிய செலவில் உருவான பல படங்கள் அதிக வசூல் ஈட்டியுள்ளன.

Update: 2024-07-28 02:11 GMT

சென்னை,

இந்த ஆண்டு இந்திய சினிமாவுக்கு முந்தைய ஆண்டைப்போல் இல்லை. இந்த ஆண்டு, ஒரு சில படங்களை தவிர மிகப்பெரிய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தன. ஆனால் சிறிய செலவில் உருவான பல படங்கள் வெற்றி பெற்றன. ஒரு சிலர் தங்கள் பட்ஜெட்டை விட பல மடங்கு சம்பாதித்துள்ளனர்.

இந்த ஆண்டின் மிகப்பெரிய லாபம் ஈட்டிய படமாக நட்சத்திரங்கள் இல்லாத 'பிரேமலு' உள்ளது. காதல், நகைச்சுவை கதைக்களத்தில் உருவான இப்படம் உலகளவில் ரூ.136 கோடி வசூல் செய்து, இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த இந்தியப் படங்களில் ஒன்றாக உள்ளது.

இந்த வசூல் பெரிதாக தெரியவில்லை என்றாலும், படத்தில் எந்த ஒரு நட்சத்திரங்களும் இல்லாமல், புதுமுகங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். வெறும் 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் அதன் பட்ஜெட்டை விட 45 மடங்கு அதிக லாபத்தை பெற்றிருக்கிறது. இது 4,500 சதவீதம் ஆகும். கிரிஷ் ஏ.டி இயக்கிய இப்படத்தில் நஸ்லென் மற்றும் மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படம், கல்கி 2898 ஏடி ஆகும். 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ. 1,100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இதன் லாபம் இப்போது 70 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. இதேபோல், ஹிருத்திக் ரோஷனின் பைட்டர் (பாக்ஸ் ஆபிஸ் ரூ. 337 கோடி) சுமார் 35 சதவீதம் லாபம் ஈட்டியுள்ளது.

அதிக லாபம் ஈட்டிய மற்ற படங்களில் 'ஹனுமான் படமும் ஒன்று'. ரூ.40 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு ரூ.350 கோடியை ஈட்டி, 775 சதவீதம் லாபத்தை பெற்றுள்ளது. மஞ்சுமல் பாய்ஸ் மற்றும் ஆவேசம் போன்ற மலையாள ஹிட் படங்களும் அதிக லாபம் ஈட்டியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்