மாஸ்கோவில் இளையராஜாவின் இசை கச்சேரி - ரஷிய துணை தூதர் தகவல்

மாஸ்கோவில் இளையராஜாவின் இசை கச்சேரியை நடத்த திட்டமிட்டுள்ளதாக ரஷிய துணை தூதர் தெரிவித்துள்ளார்.;

Update:2024-06-02 22:32 IST

சென்னை,

இளையராஜாவின் 81-வது பிறந்த நாளை ரசிகர்கள் இணையத்தில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அரசியல் கட்சித்தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில், மகளை பறிகொடுத்துவிட்டதால், பிறந்த நாள் கொண்டாட்டம் இல்லை என்று இளையராஜா தெரிவித்துள்ளார்.

இதனிடையே சென்னையில் உள்ள ரஷிய தூதரகத்தின் துணை தூதர் ஒலெக் அவ்டீவ், இன்று இளையராஜாவை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இளையராஜாவின் பிறந்தநாளில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துவதற்காக வந்தேன். அவர் ரஷியாவின் மிகச்சிறந்த நண்பர். மாஸ்கோவில் இளையராஜாவின் இசை கச்சேரியை நடத்த திட்டமிட்டுள்ளோம். ரஷிய இசை கலைஞர்களை வைத்து சிம்பொனி இசை நிகழ்ச்சியை இளையராஜா நடத்துவார். இந்த நிகழ்ச்சியை வரும் ஜூலை மாதம் நடத்த திட்டமிட்டுள்ளோம்" என்று தெரிவித்தார். 


Full View


Tags:    

மேலும் செய்திகள்