"விஜய் நடிக்கும் லியோ கதை மீது எனக்கு நம்பிக்கை அதிகமாகவே உள்ளது" - நடிகர் அர்ஜுன்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தில் நடிகர் அர்ஜூன் நடிக்கிறார்.

Update: 2023-02-10 10:10 GMT


வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'லியோ' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த கூட்டணியில் ஏற்கனவே 'மாஸ்டர்' படம் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது.இந்த படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வந்து கொண்டு இருக்கிறது.

படத்திற்கு அனிருத் இசை. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிக்கவுள்ளார். அதேபோல் நடிகர் விஜயுடன் திரிஷா, பிரியா ஆனந்த், மிஷ்கின், மன்சூர் அலிகான், அர்ஜூன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி உள்ளிட்ட பெரிய பட்டாளமே நடிக்கிறது.

இதனால் ரசிகர்கள் மத்தியில் தளபதி 67 பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் இந்த படக்குழு முதற்கட்ட படப்பிடிப்புக்காகக் காஷ்மீர் சென்றுள்ளனர். நடிகர் விஜயின் தளபதி 67 படத்தின் பெயர் என்னவாக இருக்கும் என பலரும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

'கைதி','மாஸ்டர்', 'விக்ரம்' இந்த மூன்று படங்களும் போதைப் பொருட்கள் மற்றும் கேங்ஸ்டர் கலாச்சாரத்தை மையாக வைத்து வெற்றி படங்களை கொடுத்தார் இயக்குநர் லோக்கேஷ் கனகராஜ். இதில் 'கைதி: மற்றும் 'விக்ரம்' படம் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை. இதனால் மார்வெல் படங்களைப் போன்று லோகேஷ் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் என அவரது படங்களை ரசிகர்கள் கொண்டாடினர். இதனால் இவரது அடுத்த படமும் இதன் தொடர்ச்சியாகவே இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்ததுள்ளது.

இந்நிலையில் லியோ படத்தில் நடிகர் விஜயுடன் நடிப்பது பற்றி நடிகர் அர்ஜூன் கூறும் போது,"லியோ கதை மீது எனக்கு நம்பிக்கை அதிகமாகவே உள்ளது". லியோ திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் என்னை வித்தியாசமான ஆக்ஷன் தோற்றத்தில் காண்பிக்கபோகிறார் என்றார். மேலும், மிகப்பெரிய நடிகர் விஜய், அவருடன் நான் இணைந்து நடிப்பது புதிதாக இருக்கும் என நடிகர் அர்ஜூன் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்