நான் 90 சதவிகிதம் குணம் அடைந்து விட்டேன்... அன்புக்கு நன்றி - விஜய் ஆண்டனி

தான் 90 சதவிகிதம் குணமடைந்துவிட்டதாக விஜய் ஆண்டனி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

Update: 2023-02-02 09:10 GMT

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் 'பிச்சைக்காரன்'. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்ற போது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், தான் 90 சதவிகிதம் குணமடைந்துவிட்டதாக விஜய் ஆண்டனி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்,

"அன்பு இதயங்களே நான் 90% குணம் அடைந்து விட்டேன். உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன. என்னமோ தெரியவில்லை, நான் இப்போது முன்பைவிட அதிக சந்தோஷத்தை உங்களால் உணருகிறேன். வரும் ஏப்ரல் வெளியாகும் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை இன்று முதல் தொடங்குகிறேன். அன்புக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்