மலையாள திரையுலகில் பாலியல் புகார் விவகாரம்: விஷாலின் பேட்டிக்கு பதிலடி கொடுத்த ஸ்ரீரெட்டி

ஸ்ரீரெட்டி யாருன்னே எனக்கு தெரியாது. அவங்க செஞ்ச சேட்டைகள்தான் எனக்கு தெரியும் என நடிகர் விஷால் கூறினார்.

Update: 2024-08-29 15:45 GMT

சென்னை,

ஹேமா கமிஷன் அறிக்கையால் மலையாள பட உலகில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் வெளிச்சத்துக்கு வந்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தவறான எண்ணத்தில் அழைக்கும் திரைத்துறையினர் யாராக இருந்தாலும் நடிகைகள் செருப்பால் அடிக்க வேண்டும் என தமிழ் திரைப்பட நடிகர் சங்க செயலாளர் விஷால் கூறியுள்ளார். அப்போது உங்கள் மீதே ஸ்ரீரெட்டி பாலியல் புகார் தெரிவித்தாரே என்கிற கேள்வி கேட்டதும். சிரித்துக்கொண்டே பதிலளித்த விஷால், ஸ்ரீரெட்டி யாருன்னே எனக்கு தெரியாது. அவங்க செஞ்ச சேட்டைகள் தான் எனக்கு தெரியும் என கூறினார். விஷாலின் பேட்டிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்ரீரெட்டி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியதாவது:-

வணக்கம் மிஸ்டர்..பெண்களை விரும்புபவரே..வெள்ளை முடி...மிகவும் வயதான மாமா பெண்கள் பாதுகாப்பு பற்றியெல்லாம் உமனைசரான நீ பேசலாமா? ஒரு பெண்ணை பற்றி பேசும் போது உன்னுடைய நாக்கு ரொம்பவே கேர்புல்லாக இருக்க வேண்டும். உலகத்துக்கே தெரியும் நீ எவ்ளோ பெரிய பிராடு என்று ஒரு பெண்ணை பற்றி தவறாக பேசும் போது உன் உடல் ஏன் நடுங்குது, நீயெல்லாம் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப் போறியா. அதெல்லாம் சரி உன்னுடன் இருந்த பெண்கள் எல்லாம் உன்னை ஏன் விட்டுச் சென்றனர்.

உன்னுடைய நிச்சயதார்த்தம் ஏன் நின்றுப் போனது, இந்த கேள்விக்கெல்லாம் அடுத்த முறை பதில் சொல். நீ எந்த பதவியில் இருந்தாலும் எனக்கு அது பற்றியெல்லாம் கவலையில்லை. கர்மா ஏற்கனவே உனக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து வருகிறது. மேலும், என் வீட்டில் நிறைய வித விதமான செருப்புகள் உள்ளன. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்