மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் "கவுண்டர் கிங்" கவுண்டமணி!

வயது முதிர்வு ஏற்பட்டாலும் தற்போது வரையில் தனி ஒரு ரசிகர் பட்டாளத்தையே கவுண்டமணி வைத்துள்ளார் என்றே கூறலாம்.

Update: 2023-07-25 07:47 GMT

சென்னை,

தமிழ் சினிமாவரை பொறுத்தவரையில் 80,90 கிட்ஸ் காலக்கட்டத்தில் காமெடி நடிகராக வலம் வருபவர் கவுண்டமணி. இவருக்கு வயது முதிர்வு ஏற்பட்டாலும் தற்போது வரையில் தனி ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார் என்றே கூறலாம்.

அந்த அளவிற்கு தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை ஈர்த்துள்ளார் என்றே கூறலாம். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் "எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது" என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். இவர் நடித்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக கவனத்தை ஈர்த்தது. அதே சமயம் அடுத்த படத்தின் எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் கிளம்பியது.

இந்தநிலையில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி ஹீரோவாக நடிக்க உள்ள முழுநீள நகைச்சுவை படத்திற்கு 'ஒத்த ஓட்டு முத்தையா' என பெயரிடப்பட்டுள்ளது. கவுண்டமணி ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்கிறார்.

சாய் ராஜகோபால் இயக்கும் இப்படத்தில் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, மாரிமுத்து, சிங்கம்புலி, ரவிமரியா, வையாபுரி, உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளங்கள் களம் இறங்குகின்றன.

படம் குறித்து பேசிய இயக்குநர் சாய் ராஜகோபால்,

சுமார் 70 படங்களில் கவுண்டமணி மற்றும் செந்திலுக்கான நகைச்சுவை பகுதியை எழுதியதோடு, பல்வேறு படங்களில் உதவி, துணை மற்றும் இணை இயக்குநராக நான் பணியாற்றி உள்ளேன். மணிவாசகம், அர்ஜுன், டி பி கஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் பணியாற்றி உள்ளேன்.

எனது 25 ஆண்டு கால திரையுலக பயணத்தில், பாண்டியராஜன், ஈஸ்வரி ராவ் நடிப்பில் சுந்தரி நீயும் சுந்தரன் நானும், மணிகண்டன் மற்றும் சிம்ரன் நடிப்பில் கிச்சா வயசு ஆகிய படங்களை இயக்கி உள்ளேன்.

ஒத்த ஓட்டு முத்தையா படத்தின் கதையை கவுண்டமணி அவர்களிடம் கூறியபோது மிகவும் மகிழ்ச்சி தெரிவித்ததோடு நடிப்பதற்கும் உடனே சம்மதம் தெரிவித்தார். 6 முதல் 60 வரை அனைத்து வயதினரும் ரசிக்கக்கூடிய அரசியல் கலந்த முழுநீள நகைச்சுவை திரைப்படமாக இது இருக்கும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்