'குட் பேட் அக்லி' படத்தில் அஜித்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் அஜித்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு ரிலீஸ் செய்துள்ளது.;

Update:2024-05-19 20:20 IST

நடிகர் அஜித்குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு விடாமுயற்சி என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. நீண்டநாட்களாக கிடப்பில் இருந்த இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதமாக, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தில் திரிஷா நாயகியாக நடிக்க, ரெஜினா, அர்ஜூன், ஆரவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அஜித்தின் அடுத்த படம் குறித்த அப்டேட் அண்மையில் வெளியானது. அதன்படி, அஜித் குமார் அடுத்ததாக நடிக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இது அஜித் நடிக்கும் 63-வது திரைப்படமாகும். இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது.


இத்திரைப்டத்தை மார்க் ஆண்டனி படத்தின் மூலம் பிரபலம் அடைந்த ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். தெலுங்கில் பிரபலமாக இருக்கும் மைத்ரி மூவிஸ் நிறுவனம் இத்திரைப்டத்தை தயாரிக்கிறது. இந்நிலையில், குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.

தற்போது அஜித்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளது. மூன்று வித்தியாசமான லுக்கில் இருக்கும் இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.

இந்நிலையில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், " 'குட் பேட் அக்லி' படத்திற்காக நான் ஒரே நேரத்தில் பல நட்சத்திர நடிகர்களுடன் பணியாற்றி வருகிறேன். வாழ்க்கையின் மேஜிக் என்னவென்றால், எனது நட்சத்திரத்தின் போஸ்டரை எனது அலமாரியில் ஒட்டுவதும், திரையரங்குகளில் பேனர்களாக வைப்பதும் தான். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை ரசிகனாக மட்டுமின்றி டைரக்டராகவும் வழங்குகிறேன்" என அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்