'டாடா' படம் உணர்வு ரீதியாக என்னைத் தொட்டது - ராகவா லாரன்ஸ் பாராட்டு

கவின் நடிப்பில் வெளியாகி உள்ள 'டாடா' திரைப்படத்தை நடிகர் ராகவா லாரன்ஸ் பாராட்டியுள்ளார்.

Update: 2023-02-16 14:30 GMT

சென்னை,

சரவணன் மீனாட்சி' சீரியலில் நடித்து பிரபலமானவர் கவின். இதையடுத்து படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், 'நட்புன்னா என்னானு தெரியுமா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்து கொண்டார். இதன் பின்னர் வெளியான 'லிஃப்ட்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

நடிகர் கவின் தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் 'டாடா' திரைப்படத்தில் நடித்துள்ளார். ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் பாக்யராஜ், அபர்ணா தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் பிப்ரவரி 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்திற்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் 'டாடா' படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "டாடா திரைப்படம் பார்த்தேன். உணர்வு ரீதியாக அந்த படம் என்னைத் தொட்டது. அனைவரும் திரையரங்குகளில் சென்று பார்க்கக் கூடிய சிறந்த குடும்பப் படம்.

தயாரிப்பாளருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இயக்குனர் கணேஷ் கே பாபு நன்றாக எழுதி இயக்கியுள்ளார். கவின் மற்றும் அபர்ணா தாஸ் சிறப்பாக நடித்துள்ளனர்" என்று கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்