பிரபல சினிமா தயாரிப்பாளர் அடுக்குமாடி குடியிருப்பில் மர்ம மரணம்...!
குடியிருப்போர் சங்கத்தினர் அவரது வீட்டுக்குச் என்று பார்த்தபோது அவர் சடலமாக கிடந்தார்.;
கொச்சி:
பிரபல மலையாள சினிமா தயாரிப்பாளர் ஜெய்சன் ஜோசப்(44). இவர் குஞ்சாக்கோ போபன் நடித்த ஜமுனாபியாரி, 'லவ குசா' உள்ளிட்ட படங்களை தயாரித்தவர். இவர் கொச்சியில் உள்ள பனம்பில்லி பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். அவரது குடும்பத்தினர் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர்.
அவரது உறவினர்கள் கடந்த இரண்டு நாட்களாக ஜோசப்பை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் குடியிருப்போர் சங்கத்தை தொடர்பு கொண்டு உள்ளனர்.
குடியிருப்போர் சங்கத்தினர் அவரது வீட்டுக்குச் என்று பார்த்தபோது அவர் சடலமாக கிடந்தார். இந்த மரணம் குறித்து அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள குடியிருப்போர் சங்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு ஜோசப் மரணத்திற்கான காரணம் தெரியவரும்" என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.